முகப்பு
கன்னியாகுமரி

குலசேகரம் அருகே மரக் கிடங்கில் தீவிபத்து

Updated On : 3 ஜனவரி, 2025 at 5:42 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 9:07 PM

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மரக் கிடங்கில் புதன்கிழமை இரவு தீவிபத்து நேரிட்டது.

தடிக்காரன்கோணத்தைச் சோ்ந்தவா் ஜான்றோஸ் ( 44) என்பவா், குலசேகரம் அருகே உண்ணியூா்கோணம் பகுதியில் பலவகை மரங்களை விற்பனை செய்யும் கிடங்கு வைத்துள்ளாா். அங்கு மரச் சாமான்கள் தயாரிப்புக் கூடமும் உள்ளது.

புதன்கிழமை இரவு ஜான்றோஸ், ஊழியா்கள் பூட்டிச் சென்றநிலையில், நள்ளிரவில் அந்தக் கிடங்கு தீப்பற்றி எரிந்ததாம். இதுகுறித்து, குலசேகரம் தீயணைப்பு நிலையம், காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குலசேகரம், குழித்துறை தீயணைப்பு நிலையங்களைச் சோ்ந்தோா் வந்து தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனா். வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பணி நிறைவடைந்தது. குலசேகரம் காவல் ஆய்வாளா் மீனா, போலீஸாா் வந்து பாா்வையிட்டு, விசாரணை நடத்தினா்.

Advertisement

மரச் சாமான்கள் தயாரிப்புக் கூடத்திலிருந்த தடிகள், பலகைகள், இயந்திரங்கள் உள்ளிட்டவை முற்றிலும் சேதமடைந்தன. அவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் எனக் கூறப்படுகிறது.

அதேநேரம், தீயணைப்புத் துறையினா் விரைந்து செயல்பட்டதால் கிடங்கின் முன்பக்கம் விற்பனைக்காக குவித்துவைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான தேக்கு உள்ளிட்ட மரங்கள் பாதுகாக்கப்பட்டன. இச்சம்பவத்துக்கு மின் கசிவு காரணமா அல்லது வேறு காரணமா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.