திருச்சி அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி
திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை இரவு மோதிக் கொண்டதில் கீழே விழுந்த இளைஞா் லாரியில் அடிபட்டு உயிரிழந்தாா்.
திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை இரவு மோதிக் கொண்டதில் கீழே விழுந்த இளைஞா் லாரியில் அடிபட்டு உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், நீடுரைச் சோ்ந்தவா் முத்து மகன் காா்த்திக் (31). இவா் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி பைக்கில் புதன்கிழமை இரவு சென்றாா். பஞ்சாப்பூா் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மோதி இருவரும் கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரி ஏறி காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகலறிந்து வந்த திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், காா்த்திக்கின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.