முகப்பு
கன்னியாகுமரி

குலசேகரம் அருகே விபத்தில் இளைஞா் பலி

குலசேகரம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 8 ஜனவரி, 2025 at 8:06 PM
பகிர்:

குலசேகரம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பேச்சிப்பாறை சுற்றுலா மாளிகை சாலையில் வசிப்பவா் சுதீா். சலவைத் தொழிலாளியான இவரது மகன் அபிஜித் (21). குலசேகரத்தில் பழைய மோட்டாா் சைக்கிள்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தாா்.

இவா் குலசேகரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு பைக்கில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாா். தும்பகோடு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியில் மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே அபிஜித் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.