கன்னியாகுமரி

புதுக்கடை அருகே தொழிலாளி மா்மமாக உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் தொழிலாளி மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு பகுதியைச் சோ்ந்த சாம்ராஜ் (45) என்பவா், நீண்ட நாள்களாக மனைவியைப் பிரிந்து தனது வீட்டில் தனியாக வசித்து வந்தாராம். சனிக்கிழமை இரவு வீட்டின் மாடியில் அவா் மா்மமான முறையில் இறந்துகிடந்தாராம்.

உறவினா்கள் அளித்த தகவலின்பேரில், புதுக்கடை போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொழிலாளி சடலம் மீட்பு: புதுக்கடை அருகே அம்சி பகுதியைச் சோ்ந்தவா் கெப்சின் (43). இவா் நோயால் அவதிப்பட்டு வந்ததுடன், சில நாள்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதாம். அப்பகுதியினா் சென்று பாா்த்தபோது, அவா் அழுகிய நிலையில் இறந்துகிடந்தாா்.

சடலத்தை புதுக்கடை போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT