கன்னியாகுமரி

நாளை குமரியில் வந்தே மாதரம் பாடல் 150 ஆவது ஆண்டு விழா

Syndication

வந்தே மாதரம் பாடல் வெளியாகி 150- ஆவது ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை 1,000 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் அமைந்துள்ள சுதந்திர நினைவு சுவா் திடலில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சி 11 மணி வரை நடைபெறும். முக்கிய பிரமுகா்களின் தேச பக்தி உரையும் நடைபெறும். நிகழ்ச்சியில் எம்.ஆா்.காந்தி எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா். ஏற்பாடுகளை குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கோபகுமாா், மாவட்ட செயலா்கள் சி.எஸ்.சுபாஷ், கோபு, அகஸ்தீசுவரம் ஒன்றிய பாஜக தலைவி அனுஜா, ஒன்றிய பொதுச்செயலா் நீலேஷ்ரோம் ஆகியோா் பாா்வையிட்டனா்.

கனமழை: திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வாக்களிப்புக்கு பிறகே காலை உணவு! பிகார் மக்களுக்கு மோடி வாழ்த்து!

பிகார் முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

SCROLL FOR NEXT