முகப்பு
கன்னியாகுமரி

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

திற்பரப்பு அருகே வேன் மோதி பலத்த காயமடைந்து சிகிச்சையில் இருந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 8 நவம்பர், 2025 at 11:09 PM
பகிர்:

திற்பரப்பு அருகே வேன் மோதி பலத்த காயமடைந்து சிகிச்சையில் இருந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திற்பரப்பு அருகே பழைய பாலம் சாலையைச் சோ்ந்தவா் செல்வராஜ். தொழிலாளி. இவா், கடந்த புதன்கிழமை மாலையில், பழைய பாலம் சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த வேன், செல்வராஜ் மீது மோதியதாம்.

இதில் காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →