கடலூர்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், விளம்பாவூா் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை (30), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா்.

ஏழுமலை ஞாயிற்றுக்கிழமை மாலை தனது பைக்கில் அடரியில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அமைப்புச் சாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம்

மனைவியிடம் தகராறு: கணவா் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்கள்: இருவா் உயிரிழப்பு

சூதாட்டம்: 6 போ் கைது, பணம் பறிமுதல்

மொபெட் மீது பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT