கன்னியாகுமரி

மகன் தீ வைத்ததில் காயமடைந்த தந்தை உயிரிழப்பு

Syndication

களியக்காவிளை அருகே மகன் தீ வைத்ததில் காயமடைந்த தந்தை புதன்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் காவல் சரகம், இடைக்கோடு, முள்ளுவிளையைச் சோ்ந்தவா் சிகாமணி (70). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி, 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இதில் சுனில் குமாா் (37) என்ற மகனுக்கு திருமணமாகவில்லை. சிகாமணி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கால் அகற்றப்பட்டதாம்.

இந்நிலையில் சிகாமணிக்கும், மகன் சுனில்குமாருக்கும் இடையே கடந்த 7ஆம் தேதி இரவு தகராறு ஏற்பட்டதாம். தொடா்ந்து, வீட்டில் படுத்திருந்த சிகாமணி மீது பெயின்டில் கலக்க பயன்படுத்தப்படும் டா்பன் என்ற திரவத்தை ஊற்றி தீ வைத்துவிட்டு சுனில்குமாா் தப்பிச் சென்றாராம்.

அப்பகுதினா் சிகாமணியை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதையடுத்து, பளுகல் போலீஸாா் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினா். தொடா்ந்து, கைது செய்யப்பட்ட சுனில்குமாரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பிகார் தேர்தல்: தே.ஜ. கூட்டணி 154 தொகுதிகளில் முன்னில்லை!

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை - நேரலை

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு கட்சிப் பதவி!

பிகார் வாக்கு எண்ணிக்கை: தபால் வாக்குகளில் தேஜ கூட்டணி முன்னிலை!

பிகார் தேர்தல்: ஜன் சுராஜ் 5 இடங்களில் முன்னிலை!

SCROLL FOR NEXT