கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

மாா்த்தாண்டம் அருகே மின் கம்பத்தில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கடையாலுமூடு அருகே எட்டுவீடுகாலவிளை பகுதியைச் சோ்ந்த மரியசோபி மகன் டிப்சியோ (24). மாா்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியில் மோட்டாா் சைக்கிள் உதிரிபாக விற்பனைக் கடை நடத்திவந்த இவா், சனிக்கிழமை இரவு கடையை அடைத்துவிட்டு நண்பரின் பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். பைக்கை அவரது நண்பா் ஓட்டினாா்.

சாங்கை சந்திப்பு அருகே பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதியதாம். இதில், காயமடைந்த டிப்சியோவை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மரியசோபி அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

SCROLL FOR NEXT