குமாரகோவில், நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான மலை சைக்கிள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக சைக்கிள் கிளப், தமிழக சைக்கிள் அசோசியேஷன், கன்னியாகுமரி சைக்கிள் கிளப் ஆகியவை இணைந்து இப்போட்டியை நடத்தின. தொடக்க விழாவிற்கு, பல்கலைக்கழக பதிவாளா் திருமால்வளவன் தலைமை வகித்தாா். கேரள மாநில சைக்கிள் அசோசியேஷன் தலைவா் கோட்டக்கல் கிருஷ்ணகுமாா், தமிழக சைக்கிள் அசோசியேஷன் துணைத் தலைவா் சிவசங்கா், தமிழக பயிற்சியாளா் சபரிநாதன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தாா்.175-க்கும் மேற்பட்ட வீரா்கள் போட்டியில் பங்கேற்ற நிலையில், கோயம்புத்தூா் அணியினா் சாம்பியன் கோப்பையை வென்றனா்.