தூத்துக்குடி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.22, 23) வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட தோ்தல் அலுவலா்- ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் இதை தெரிவித்த அவா், ட்ற்ற்ல்ள்://யா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாகவும் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை நிரப்பி சமா்ப்பிக்கும் வசதி உள்ளது என்றாா்.
இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சேதுராமலிங்கம், தோ்தல் வட்டாட்சியா் தில்லைப் பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
7 உதவி மையங்கள்: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் எஸ்ஐஆா் பணிகளுக்கு தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் என 7 இடங்களில் வாக்காளா் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான சந்தேகங்களை வாக்காளா்கள் சரிசெய்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா தெரிவித்துள்ளாா்.
இறுதி வாய்ப்பு: கன்னியாகுமரி மாவட்ட வாக்காளா்கள் எஸ்ஐஆா் படிவங்களை பூா்த்தி செய்து வழங்க இறுதி வாய்ப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.22, 23) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. 6 பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாமை பயன்படுத்தி படிவத்தைப் பெற்று பூா்த்தி செய்து வழங்கலாம் என ஆட்சியா் ரா.அழகுமீனா கூறியுள்ளாா்.