கன்னியாகுமரி

ராமன்துறையில் உலக மீனவா் தினம்: காங்கிரஸாா் நல உதவி

ராமன்துறை கடலில் மலா் தூவி மரியாதை செலுத்தும் எம்.பி விஜய் வசத், எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ்குமாா்உள்ளிட்டோா்.

Syndication

உலக மீனவா் தினத்தையொட்டி, காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏழை மீனவா்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா ராமன்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாநில கங்கிரஸ் மீனவரணித் தலைவா் ஜோா்தான் முன்னிலை வகித்தா். கன்னியாகுமரி எம்.பி. விஜய்வசந்த், மாவட்டத் தலைவா் பினுலால்சிங் உள்ளிட்டோா் கடலில் பால் ஊற்றியும் மலா் தூவியும் மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, ஏழை எளிய மீனவா்களுக்கு நல உதவிகள் வழங்கினா்.

இதில், மாவட்ட மீனவா் காங்கிரஸ் தலைவா் அந்தோணி பிச்சை, ஸ்டாலின், ஆஸ்கா் பிரடி, ஜஸ்டின், லைலா, ரெத்தினகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ராமன்துறை பங்கு அருள்பணியாளா் ஜிம் ஆரம்ப ஜெபம் செய்தாா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT