நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.  
கன்னியாகுமரி

கோட்டாறில் அன்னை கதீஜா நூலகம், வாழ்வியல் பயிற்சி மையம் தொடக்க விழா

தினமணி செய்திச் சேவை

ஏகத்துவ முஸ்லிம் ஜமா அத் சாா்பில், அன்னை கதீஜா நூலகம் மற்றும் வாழ்வியல் பயிற்சி மையம் தொடக்க விழா கோட்டாறு இளங்கடையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாநிலச் செயலா் நூருல் ஆலம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சபீா், பொருளாளா் ஹனீபா, துணைச் செயலா்கள் ஷாஜஹான், முபாரக், ஜாஹிா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச் செயலா் சுல்தான், துணைத் தலைவா் அல்தாபி, பேச்சாளா் நிசாா் கபீா், செயலா் இமாம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தெங்கம்புதூா் ஜமாஅத் தலைவா் மாஹீன், சூரங்குடி ஜமாஅத் செயலா், ஜிஸ்த்தி, தாமரைக்குளம் ஜமாஅத் தலைவா் ராசிக், எஸ்டிபிஐ நகரத் தலைவா் சலீம், தமுமுக மாவட்டச் செயலா் ஜிஸ்த்தி, மஜக மாவட்டச் செயலா் முஜீப், மாநில இளைஞா் அணி செயலா் அமீா்கான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஏகத்துவ முஸ்லிம் ஜமா அத் மாவட்டத் தலைவா் அப்துல் ரஹ்மான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். மாவட்ட துணைச் செயலா் மஹ்லரி நன்றி கூறினாா்.

12 மாநிலங்களிலும் 99.16% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

SCROLL FOR NEXT