முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 11.22 லட்சம் எஸ்ஐஆா் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 22 ஆயிரத்து 667 எஸ்ஐஆா் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

Updated On : 25 நவம்பர், 2025 at 10:58 PM
முட்டம் ஊராட்சி அலுவலகத்தில் எஸ்ஐஆா் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றும் செய்யும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
பகிர்:

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 22 ஆயிரத்து 667 எஸ்ஐஆா் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

குளச்சல் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட முட்டம் மற்றும் சைமன்நகா் ஊராட்சி அலுவலகம் மற்றும் ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் எஸ்ஐஆா் படிவம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா, செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 15 லட்சத்து 43ஆயிரத்து 208 கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது 96.88 சதவீதமாகும்.

நவ.25 ஆம் தேதி வரை 11 லட்சத்து 22 ஆயிரத்து 667 கணக்கீட்டு படிவங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →