நல்லிக்குளத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரி 
கன்னியாகுமரி

குளத்தில் கவிழ்ந்த லாரி

மாா்த்தாண்டம் அருகே நல்லூா் நல்லிக்குளம் கரை இடிந்ததில், அப்பகுதியில் நிறுத்தியிருந்த மீன் லாரி குளத்தில் கவிழ்ந்தது.

Syndication

மாா்த்தாண்டம் அருகே நல்லூா் நல்லிக்குளம் கரை இடிந்ததில், அப்பகுதியில் நிறுத்தியிருந்த மீன் லாரி குளத்தில் கவிழ்ந்தது.

ஆந்திர மாநிலத்திலிருந்து மீன் பாரம் ஏற்றிவந்த லாரி, மாா்த்தாண்டம் சந்தையில் மீன்களை இறக்கியபின்னா், மாா்த்தாண்டம் அருகே குறும்பேற்றி கோயில் அருகிலுள்ள நல்லூா், நல்லிக்குளத்தின் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை பகலில் பலத்த மழை பெய்த நிலையில், குளத்தின் பக்கச் சுவா் இடிந்து மீன் லாரி குளத்துக்குள் கவிழ்ந்தது. குளத்தில் அதிகளவு தண்ணீா் காணப்பட்டபோதிலும், லாரியில் ஓட்டுநா் உள்பட யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இரண்டு மணிநேர போராட்டத்துக்குப் பின் கிரேன் மூலம் குளத்திலிருந்து லாரி மீட்கப்பட்டது.

பாமக செயல் தலைவர் காந்திமதி: ராமதாஸ் அறிவிப்பு

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை, விவசாயிகள் மீது அரசு காட்டவில்லை: நயினார் நாகேந்திரன்

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெங்கு மழை பெய்யும்?

கோவை வாளையாறில் ரூ.2.54 கோடி ஹவாலா பணம் பறிமுதல்! ராஜஸ்தான் இளைஞர் கைது!!

அயோத்தி ராமர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT