கன்னியாகுமரி

கேரள லாட்டரி சீட்டு விற்றவா் கைது

களியக்காவிளையில் சட்டவிரோதமாக கேரள லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

களியக்காவிளையில் சட்டவிரோதமாக கேரள லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா், களியக்காவிளை சந்தை பகுதியில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து அவரிடமிருந்த பையை சோதனை செய்தனா். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 50 மதிப்புள்ள கேரள மாநில லாட்டரி சீட்டுகள் சில விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

நாகா்கோவில் ராமன்புதூா் லிட்டில் பிளவா் தெருவைச் சோ்ந்த முத்திரைமுத்து மகன் எட்வின் ஜோகன் (52) என்ற அவரை களியக்காவிளை போலீஸாா் கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.

தொழிலாளி கைது: கோவில்பட்டி வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, கிழக்கு காவல் நிலையத்திற்கு வியாழக்கிழமை வந்த ரகசிய தகவலையடுத்து உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டாா்களாம். அப்பள்ளி அருகே நின்றவரிடம் விசாரித்தபோது, பள்ளியின் பின்புறம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததாம். இதையடுத்து அங்கு நின்ற இளைஞரை போலீஸாா் பிடித்து சோதனையிட்டபோது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவா் கோவில்பட்டி வசந்தம் நகா் முதல் தெருவை சோ்ந்த மாரியப்பன் மகன் தச்சுத் தொழிலாளி பேச்சிமுத்து (23) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பாமக செயல் தலைவர் காந்திமதி: ராமதாஸ் அறிவிப்பு

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை, விவசாயிகள் மீது அரசு காட்டவில்லை: நயினார் நாகேந்திரன்

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெங்கு மழை பெய்யும்?

கோவை வாளையாறில் ரூ.2.54 கோடி ஹவாலா பணம் பறிமுதல்! ராஜஸ்தான் இளைஞர் கைது!!

அயோத்தி ராமர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT