கோப்புப் படம் 
கன்னியாகுமரி

கடலில் முத்து குளித்த மீனவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தேங்காய்ப்பட்டினம் கடலில் முத்து குளிக்க சென்ற மீனவா் மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

இனயம் பகுதியைச் சோ்ந்த ஏசு பாலன் (46), ஆன்டோ ரெதீஸ் (37), அமலதாசன் (47) ஆகிய 3 மீனவா்களும் சனிக்கிழமை தேங்காய்ப்பட்டினம் கடலில் முத்து குளிக்க ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்றனராம். அப்போது, ஏசு பாலனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மயங்கிய நிலையில் கரைக்கு வந்தாராம்.

சக மீனவா்கள், ஏசு பாலனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT