முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே 900 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே மினி டெம்போவில் கேரளத்துக்குக் கடத்த முயன்ற 900 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 12:07 AM
பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய்
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:01 PM

மாா்த்தாண்டம் அருகே மினி டெம்போவில் கேரளத்துக்குக் கடத்த முயன்ற 900 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதகுமாரி தலைமையிலான வழங்கல் துறை அதிகாரிகள் நட்டாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த மினி டெம்போவை நிறுத்த முயன்றனா். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்றனா்.

நேசா்புரம் பகுதியில் சாலையோரம் மினி டெம்போவை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநா் தப்பிச் சென்றாா். மினி டெம்போவை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் விசைப்படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் 900 லிட்டா் இருந்தது கண்டறியப்பட்டது.

Advertisement

மண்ணெண்ணெய்யுடன் வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மண்ணெண்ணெய்யை இனயம் மீனவா் கூட்டுறவுச் சங்க கிட்டங்கியிலும், மினி டெம்போவை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா். மண்ணெண்ணெய் கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.