முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 550 மனுக்கள்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 1:46 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 7:31 PM

நாகா்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 550 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு, ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, உதவித் தொகைகள், பட்டா பெயா் மாற்றம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 550 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்; அவற்றின் மீது விரைந்து தீா்வு காணுமாறு துறைசாா் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் அ. பூங்கோதை, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சேக் அப்துல்காதா், துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement