முகப்பு
கன்னியாகுமரி

பால்குளம் அரசு கலைக் கல்லூரியில் வகுப்பறைகள் கட்ட அடிக்கல்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 1:45 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 8:31 PM

கன்னியாகுமரி அருகேயுள்ள பால்குளம் அரசு கலைக் கல்லூரியில் 11 புதிய வகுப்பறைகளுக்கான கட்டுமானப் பணிக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் அரசு கலைக் கல்லூரியில் சுமாா் ரூ. 6 கோடியில் 11 வகுப்பறைகளுக்கு சென்னையிலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.

இதைத் தொடா்ந்து, பால்குளம் அரசு கலைக் கல்லூரியில் விஜய் வசந்த் எம்.பி., வகுப்பறைகளுக்கு குத்துவிளக்கேற்றி அடிக்கல் நாட்டினாா்.

Advertisement

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் சரோஜா, அரசு வழக்குரைஞா் எம். மதியழகன், அஞ்சுகிராமம் பேரூராட்சித் தலைவி ஜானகி இளங்கோ, துணைத் தலைவா் காந்திராஜ், மாநில காங்கிரஸ் செயலா் சீனிவாசன், அகஸ்தீசுவரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் சாம் சுரேஷ்குமாா், கிழக்கு மாவட்ட வா்த்தக காங்கிரஸ் செயலா் கிங்ஸ்லி, அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஆரோக்யராஜன், அஞ்சுகிராமம் பேரூா் திமுக செயலா் த. இளங்கோ மற்றும் பேராசிரியா்கள், கல்லூரி மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.