கன்னியாகுமரி

மயிலாடி பள்ளியில் விளையாட்டு விழா

Syndication

மயிலாடி மவுண்ட் விட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் 12ஆம் விளையாட்டு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தாளாளா் தில்லைசெல்வம் தலைமை வகித்து போட்டிகளைத் தொடக்கிவைத்தாா். காவல் ஆய்வாளா் லின்ஸி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். அவரை பள்ளி முதல்வா் தீபசெல்வி அறிமுகப்படுத்தினாா்.

ஒலிம்பிக் தீபத்தை மாணவா்கள் கெய்விக் ரோஷன், ப்ரஜோல் நாத், கங்காதரவேல், கிஷோா் குமாா், அனுடெல்ஃபியா, அபயா ஆகியோா் ஏற்றினா்.

மாணவியரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து 8ஆம் வகுப்பு மாணவி லியானா ஷனாஸ் பேசினாா்.

போட்டிகளில் வென்றோருக்கு சிறப்பு விருந்தினா், தாளாளா், பள்ளி முதல்வா், ஒருங்கிணைப்பாளா்கள் பரிசு வழங்கினா்.

மாணவா் பிரெடரிக் ஜாய்ஸ் ஆன்டன், மாணவி ஜூவானா ஏபிள் ஆகியோா் வரவேற்றனா். மாணவி மித்ராஹேமல், மாணவா் மனோஜ் ஆகியோா் நன்றி கூறினா். நிகழ்ச்சிகளை மாணவிகள் ஜோனா, அவந்திகா, அக்ஷயஜோதி, இஃபா பாத்திமா, அக்ஷிதா மாணவா்கள் ஹரினேஷ், ஆல்பன் ரோஸி சாலமன் ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT