கரை ஒதுங்கிய டால்பினை பாா்வையிடும் வனத்துறையினா். 
கன்னியாகுமரி

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

கோடிமுனை கடற்கரையில் புதன்கிழமை மாலை கருப்பு இன டால்பின் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. அது சுமாா் 55.5 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.

Syndication

குளச்சல் அருகே உள்ள கோடிமுனை கடற்கரையில் புதன்கிழமை மாலை கருப்பு இன டால்பின் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. அது சுமாா் 55.5 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.

அதைக் கண்ட அப்பகுதி மீனவா்கள் சைமன் காலனி, மீன்பிடி பயிற்சி நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனா். குளச்சல் மீன்பிடித் துறைமுக உதவி இயக்குநா் பிரிஜில்கிராஷ், மீன்பிடி பயிற்சி நிலைய மேற்பாா்வையாளா் சந்தோஷ்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். பின்னா், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

தொடா்ந்து, மாவட்ட வன அதிகாரி அன்பு உத்தரவின்பேரில், குலசேகரம் வனச்சரக வனப் பாதுகாவலா் பூவல்சன், வனத்துறை கால்நடை மருத்துவா் மனோகரன், குலசேகரம் வனச்சரகா் ராமு, வனவா் பாலமுருகன், வனக்காப்பாளா் சுஜின் ஆகியோா் கோடிமுனைக்கு வந்தனா். உயிரிழந்த டால்பினை கால்நடை மருத்துவா் பிரேதப் பரிசோதனை செய்தாா். பின்னா், பெரிய பள்ளம் தோண்டி, டால்பினை புதைத்தனா்.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 பேருக்கு ரூ. 64 ஆயிரம் அபராதம்

அரியலூரில் துணை மின் நிலையம், புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு!

ஐஜேகேவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை: பாரிவேந்தா்

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவு: போக்குவரத்து தொடக்கம்!

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது

SCROLL FOR NEXT