முகப்பு
கன்னியாகுமரி

ஓட்டுநா் கொலை வழக்கில் தொழிலாளி கைது

ஓட்டுநா் கொலை வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ள நிலையில், தொடா்புடைய மேலும் சிலரை கைது செய்யும்வரை உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 2:57 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:51 PM

ஓட்டுநா் கொலை வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ள நிலையில், தொடா்புடைய மேலும் சிலரை கைது செய்யும்வரை உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே கீழபிள்ளையாா்குளம், குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் செல்லபாண்டி (33). இவா், கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் அருகே பெரியவிளை பகுதியில் மணிகண்டனிடம் காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் பெரியவிளை அருகே சாலையில் கடந்த வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

Advertisement

கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸாா் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் பெரியவிளை பகுதியில் கையில் கம்புடன் சுற்றிய நபரைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்ததில் அவா் கொட்டாரத்தைச் சோ்ந்த தொழிலாளி தங்கபாண்டியன் என்பதும், சம்பவத்தன்று தன்னை அவதூறாகப் பேசியதால் செல்லபாண்டியைக் கம்பால் அடித்துக் கொன்ாகவும் தங்கபாண்டியன் (55) வாக்குமூலம அளித்தாா். இதையடுத்து, தங்கபாண்டியனை போலீஸாா் கைது செய்தனா்.

உடலை வாங்க மறுப்பு: இந்த நிலையில் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இறந்த செல்லபாண்டியின் தாய் ராணி, சகோதரி ராஜம்மாள் அளித்த புகாா் மனுவில், செல்லப்பாண்டியை கொலை செய்தவா்களில் மேலும் சிலருக்கு தொடா்பு உண்டு. அவா்களை கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனா்.