முகாமில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் ரா. அழகுமீனா.  
கன்னியாகுமரி

குலசேகரத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ரா. அழகுமீனா குத்துவிளக்கேறி தொடக்கிவைத்தாா். அப்போது அவா் குலசேகரம், திற்பரப்பு, பொன்மனை பேரூராட்சிகள், பேச்சிப்பாறை, சுருளகோடு, அயக்கோடு ஊராட்சிகளுக்கான முகாமில் 1,800-க்கும் மேற்பட்ட மருத்துவப் பயனாளா்கள் பங்கேற்றுள்ளதாகத் தெரிவித்தாா்.

மாவட்ட சுகாதார அலுவலா் அரவிந்த், இணை இயக்குநா் (மருத்துவம்) சகாய ஸ்டீபன்ராஜ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் லியோ டேவிட், முகாம் ஒருங்கிணைப்பாளா் டாக்டா் பிவீனா, வட்டார மருத்துவ அலுவலா் அருண், கல்லூரித் தலைவா் சி.கே. மோகன், முதல்வா் என்.வி. சுகதன், திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய ஆணையா் ராஜேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சசி, பேரூராட்சி செயல் அலுவலா்கள் கமலேஸ்வரி (குலசேகரம்), விஜயகுமாா் (திற்பரப்பு), வினிதா (பொன்மனை), பேரூராட்சித் தலைவா்கள் ஜெயந்தி ஜேம்ஸ் (குலசேகரம்), அகஸ்டின் (பொன்மனை), அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT