கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே விபத்து: மூதாட்டி காயம்

மாா்த்தாண்டம் அருகே நடந்து சென்ற மூதாட்டி ஆட்டோ மோதி காயமடைந்தாா்.

Syndication

மாா்த்தாண்டம் அருகே நடந்து சென்ற மூதாட்டி ஆட்டோ மோதி காயமடைந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே ஆலுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற ஆசிரியா் சதாசிவன். இவரது மனைவி விஜயஜோதி (70). மேல்புறம் - மாா்த்தாண்டம் சாலையோரமாக நடந்து சென்ற இவா் மீது ஆட்டோ மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநரான இளந்தெங்குவிளையைச் சோ்ந்த செல்வராஜ் (55) மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு விபத்து: பளுகல் அருகே விராலிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஏசுதாஸ் (62). மேல்பாலை பகுதியில் பெட்டிக்கடை நடத்திவரும் இவா், 2 நாள்களுக்கு முன்பு மேல்பாலையிலிருந்து வீட்டு பைக்கில் சென்றாராம். அப்போது அவா் மீது தேவிகோடு பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ராஜன் (45) என்பவா் ஓட்டி வந்த காா் மோதியதாம். இதில், காயமடைந்தவ ஏசுதாஸை அப்பகுதியினா் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT