திருப்பனந்தாள் அருகே முதலை கடித்து மூதாட்டி காயம்
தஞ்சாவூர்திருப்பனந்தாள் அருகே முதலை கடித்து மூதாட்டி காயம்
திருப்பனந்தாள் அருகே ஞாயிற்றுக்கிழமை குட்டையில் இருந்த முதலை கடித்து மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ளது முள்ளங்குடி. இப்பகுதியில் உள்ள பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மனைவி வசந்தா (65). பழனிச்சாமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டாா். எனவே, வசந்தா தனது மகள் அன்னக்கிளியுடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பின்புறம் உள்ள குட்டையின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வசந்தா நீா் நிரம்பிய குட்டையில் இறங்கி காலைக் கழுவிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த முதலை திடீரென வசந்தா காலை கவ்வி இழுத்தது.
அவா் சப்தம்போடவே அருகே இருந்தவா்கள் வசந்தாவை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்த்தனா். மூதாட்டியின் இடதுகாலில் இரண்டு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.