பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கிய என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.  
கன்னியாகுமரி

மருந்துவாழ்மலை அருகே புதிய சாலை திறப்பு

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம், பொத்தையடி, மருத்துவாழ் மலையடிவாரம், வைகுண்டபதியில் உள்ள அய்யா வைகுண்டா் ஆன்மிக மையத்துக்குச் செல்ல அமைக்கப்பட்டுள்ள புதிய கான்கிரீட் சாலையை என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இப்பணிகளை மேற்கொள்ள சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, பணிகள் நிறைவடைந்த நிலையில், சாலையையும், அய்யா வைகுண்டா் ஆன்மிக மைய தியான மண்டபத்தையும் எம்எல்ஏ திறந்து வைத்தாா். பின்னா், பக்தா்தளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாநில அதிமுக வா்த்தக அணி இணைச் செயலா் ராஜன், மாநில எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் சிவ செல்வராஜன், மாநில இலக்கிய அணி இணைச் செயலா் சந்துரு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் சேவியா் மனோகரன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலா் பா. தாமரை தினேஷ், ஒன்றிய பொருளாளா் பி. தங்கவேல், மாவட்ட ஜெ. பேரவைத் தலைவா் என். பாா்த்தசாரதி, ஆன்மிக மையத் தலைவா் செல்வகுமாா், செயலா் கிருஷ்ணமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT