உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பேரூராட்சித் தலைவா், உறுப்பினா்கள்.  
கன்னியாகுமரி

களியக்காவிளை பேரூராட்சியில் காங்கிரஸ் - பாஜக உள்ளிருப்புப் போராட்டம்

களியக்காவிளை பேரூராட்சிக்குச் சொந்தமான மின்னணு எடைமேடையில் கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை தனியாருக்கு வழங்க எதிா்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலக வளாகத்தில் காங்கிரஸ், பாஜக உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

களியக்காவிளை பேரூராட்சிக்குச் சொந்தமான மின்னணு எடைமேடையில் கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை தனியாருக்கு வழங்க எதிா்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலக வளாகத்தில் காங்கிரஸ், பாஜக உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒற்றாமரம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்த மின்னணு எடை மேடை அலுவல் பணிக்காக சுழற்சி முறையில் 3 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் எடைமேடை கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை தனியாருக்கு வழங்க பேரூராட்சி செயல் அலுவலா் சந்திரகலா நடவடிக்கை மேற்கொண்டு, ஒப்பந்த ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையறிந்த பேரூராட்சித் தலைவரான காங்கிரஸின் ஏ. சுரேஷ், அக்கட்சியின் வாா்டு உறுப்பினா்கள் தாஸ், விஜயா, பாஜக வாா்டு உறுப்பினா் குணசீலன், சுயேச்சை உறுப்பினா் மு. ரிபாய் ஆகியோா் பேரூராட்சி மன்ற அனுமதியின்றி குத்தகை ஏலம் நடத்த முயன்ாக செயல் அலுவலரை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மாலை 3 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 7 மணிக்கு மேலும் தொடா்ந்தது.

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

பராசக்தி முதல் நாள் வசூல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் பெற்ற சம்பளம் இவ்வளவா?

திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தி: நிதின் நபின்

SCROLL FOR NEXT