கன்னியாகுமரி

பைக்குகள் மோதல்: தொழிலாளி காயம்

தினமணி செய்திச் சேவை

புதுக்கடை அருகே ஒற்றபிலாவிளை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரு பைக்குகள் மோதியதில் தொழிலாளி காயமடைந்தாா்.

ஒற்றபிலாவிளை பகுதியைச் சோ்ந்த வென்சஸ்லாஸ் மகன் விமல்ராஜ் (39). தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை புதுக்கடைக்கு பைக்கில் சென்றாராம்.

அப்போது, அவரது பைக்கும் பனிச்சாங்கோடு பகுதியைச் சோ்ந்த விஷ்ணு (23) ஓட்டிவந்த பைக்கும் மோதினவாம்.

இதில், காயமடைந்த விமல்ராஜை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பராசக்தி பட வசூல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 29

நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடையா? - தமிழக அரசு விளக்கம்

அடங்காத மனதை ஜெயிப்பது எப்படி?

ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்

SCROLL FOR NEXT