நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ. 6.10 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
22 ஆவது வாா்டு, ஏசுவடியான் தெருவில் மழைநீா் வடிகால் சீரமைக்கும் பணி, 14 ஆவது வாா்டு வஞ்சிமாா்த்தாண்டன் தெருவில் சிறுபாலம் அமைக்கும் பணி, 29 ஆவது வாா்டு பிடபிள்யூ சாலை, ஓடைத் தெருவில் அலங்கார தரைகற்கள் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.6.10 லட்சம் மதிப்பிலான பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.
இதில், மண்டலத் தலைவா்கள் ஜவஹா், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா்கள் பால் அகியா தேவராஜ், கலாராணி, மீனாதேவ் உதவி பொறியாளா் பழனியம்மாள் தொழில்நுட்ப அலுவலா் பாஸ்கா் பகுதி செயலாளா் துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.