கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் ஆட்சியா் ரா. அழகு மீனா கலந்து கொண்டு அலுவலா்களுடன் இணைந்து பொங்கலிட்டு, பொங்கல் வாழ்த்து தெரிவித்தாா். இதில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.பூங்கோதை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) கு.சுகிதா, (வேளாண்மை) கீதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணிபொ்ணாண்டோ, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் சிவகாமி, தோட்டக்கலை துணை இயக்குநா் நக்கீரன், மாவட்ட வழங்கல் அலுவலா் புஷ்பாதேவி, ஆட்சியா் அலுவலக மேலாளா்கள் சுப்பிரமணியம், தாஜூநிஷா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து ஆட்சியா் கிள்ளியூா் பேரூராட்சி அலுவலகம், கக்கோட்டுதலை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவிலும் பொதுமக்களுடன் கலந்துகொண்டு, வாழ்த்து தெரிவித்தாா்.
இதே போல் நாகா்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசுப்போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம், நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகம்,பைங்குளம் ஊராட்சி அலுவலகம், மருதூா் குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம், ராமபுரம் ஊராட்சி அலுவலகம், தோவாளை ஊராட்சி அலுவலகம், உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.