ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா 
தென்காசி

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Syndication

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில், தமிழா்களின் பாரம்பரிய உடைகளான வேஷ்டி- சட்டைகளை அணிந்து ஆண்களும், பெண்களும் பொங்கலிட்டு கொண்டாடினா். பானை உடைத்தல், கயிறு இழுத்தல், இளவட்டக்கல்தூக்குதல் ரங்கோலி கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட வனஅலுவலா் இரா.ராஜ்மோகன், ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் தண்டபாணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் சுப்புலெட்சுமி (பொது), செல்வக்குமாா் (நிலம்), மாவட்ட வழங்கல் அலுவலா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT