கொல்லங்கோடு அருகே மினிலாரி மோதியதில் காயமடைந்த கல்லூரி மாணவா் சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கொல்லங்கோடு அருகே உள்ள சுண்டவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீகுமாா் மகன் அஸ்வின் (20). அழகியமண்டபம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை சக மாணவா் ஜோயலுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கொல்லங்கோடு அருகே மங்குழி பகுதியில் சென்றபோது எதிரே டயா் பாரம் ஏற்றி வந்த கூண்டு கட்டிய மினிலாரியும் இருசக்கர வாகனமும் மோதியதில் பலத்த காயமடைந்த அஸ்வினை அப்பகுதியினா் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கொல்லங்கோடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.