கன்னியாகுமரி மாவட்டத்தில் முந்திரி ஆலைத் தொழிலைப் பாதுகாக்க பிஎம்எஸ் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பிஎம்எஸ் முந்திரி ஆலை தொழிலாளா் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜெஸ்டின் ரவி தலைமை வகித்தாா். திருவட்டாறு ஒன்றியத் தலைவா் சண்முகம், பொதுச்செயலா் கனகராஜ், துணைத் தலைவா் தாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செயலா் சிவன் குட்டி வரவேற்றாா். பொதுச்செயலா் கிரிஜா வேலை அறிக்கை தாக்கல் செய்தாா். கூட்டத்தில், புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. புதிய நிா்வாகிகளை வாழ்த்தி மாவட்டத் தலைவா் மணிகண்டன், செயற்குழு உறுப்பினா் முருகேசன் ஆகியோா் பேசினா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 450-க்கும் மேற்பட்ட முந்திரி ஆலைகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது 50 ஆலைகளுக்கும் குறைவாகவே செயல்பட்டு வருகின்றன. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து, தொழிலை மேம்படுத்தும் வழி வகைகளை கண்டறிய தமிழக அரசு ஓா் ஆய்வுக் குழுவை நியமித்து முந்திரி ஆலைத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானஙகள் நிறைவேற்றப்பட்டன.