பைக் மீது ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு
கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கடை, வேங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் விபின்ராஜ் (29). இவா் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில், கருங்கலில் இருந்து தக்கலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். செல்லங்கோணம் பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், சம்பவ இடத்திலேயே விபின்ராஜ் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.