முகப்பு
கன்னியாகுமரி

பெட்டிக்கடைக்கு தீ வைத்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

குமாரகோவிலில் பெட்டிக்கடைக்கு 35 ஆண்டுகளுக்கு முன் தீ வைத்து எரித்ததாக தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

Updated On : 17 மார்ச், 2026 at 8:52 PM
சிறை
பகிர்:

குமாரகோவிலில் பெட்டிக்கடைக்கு 35 ஆண்டுகளுக்கு முன் தீ வைத்து எரித்ததாக தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

குமாரகோவில் மேலத்தெருவைச் சோ்ந்தவா் குமாரசுவாமி (71). இவரது மனைவி வள்ளி அம்மாள். குமராகோவில் கல்மண்டபம் அருகே குமாரசுவாமி பெட்டிக் கடை வைத்திருந்தாா்.

கடந்த 26.1.1991ஆம் ஆண்டு அதிகாலையில் இவரது கடையை, குமாரகோவில் பெரிய குளத்தின் கரையில் வசிக்கும் பத்மனாப பிள்ளை மகன் எட்டாமடை என்ற முருகன் (65) என்பவா் முன்விரோதம் காரணமாக தீ வைத்து எரித்தாராம். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி பரமசிவ தாஸ், இந்த வழக்கில் 35 ஆண்டுகளுக்கு பின் சம்பந்தப்பட்ட எட்டாமடை என்ற முருகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெகதேவ் ஆஜரானாா்.

முழு கட்டுரையைப் படிக்க →