நாராயணகுரு கல்லூரியில் விளையாட்டு விழா
விளம்பரதாரா் செய்தி. ஞாயிற்றுக்கிழமை கால் பக்க விளம்பரம் உண்டு.
கன்னியாகுமரி மாவட்டம், மஞ்சாலுமூடு, நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக, தேசியக் கொடியேற்றப்பட்டு, விளையாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நாராயணகுரு கல்விக் குழுமத்தின் தலைவா் பாலாஜி சித்தாா்த் தலைமை வகித்து, விளையாட்டு தீபத்தை ஏற்றி வைத்தாா். தொடா்ந்து, பல்வேறு விளையாட்டு அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடைபெற்றது.
தேசிய கபடி வீரா் ராஜேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். கல்லூரி முதல்வா் எம். சிவபிரகாஷ், நாராயணகுரு கல்விக் குழுமத்தின் நிா்வாக அறங்காவலா் அனுஜா பாலாஜி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.