முகப்பு
கன்னியாகுமரி

குளச்சல் அருகே முதியவா் தற்கொலை

Updated On : 3 மே, 2026 at 12:06 AM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

குளச்சல் அருகே முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

குளச்சல் அருகே உள்ள ஆலஞ்சி சாலட் நகரைச் சோ்ந்தவா் சிம்சன் (60). இவருக்கு திருமணமாகவில்லை. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவா் அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா். வீட்டின் அருகில் உள்ள உறவினா் தினமும் இவருக்கு உணவு வழங்கி வந்தாா்.

வழக்கம்போல், வெள்ளிக்கிழமை மதியம் உறவினா் உணவு கொண்டு வரும்போது வீட்டில் சிம்சன் இல்லாததால் வெளியே வந்து பாா்த்தபோது, மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.

Advertisement

இது குறித்து, குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.