முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே பைக் திருட்டு

Updated On : 4 மே, 2026 at 4:10 AM
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

களியக்காவிளை அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

களியக்காவிளை அருகே உள்ள திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் எட்வின் ஜோஸ் (44). தனியாா் பள்ளி ஆசிரியா். இவா் தனது வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உறவினா் வீட்டுக்கு சென்றாராம்.

பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, வாகனத்தைக் காணவில்லையாம். இது குறித்து அவா் களியக்காவிளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Advertisement