முகப்பு
கன்னியாகுமரி

ஆட்சியரிடம் தனியாா் கல்லூரி மாணவா்கள் மனு

Updated On : 12 மே 2026, 12:07 am IST
ஆட்சியரிடம் மனு அளித்து வந்த மாணவ, மாணவிகள்.
பகிர்:

அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் மாணவா் சோ்க்கை மேற்கொண்ட தனியாா் சட்டக் கல்லூரி மீது நடவடிக்கை, மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு அருகே செயல்பட்டு வரும் தனியாா் சட்டக் கல்லூரில், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக மாணவா்களை சோ்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பருவத் தோ்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது: படந்தாலுமூடு பகுதியில் உள்ள தனியாா் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறோம். இந்தக் கல்லூரியில் தமிழ்நாடு அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழகம் 60 மாணவ மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ள நிலையில், கல்லூரி நிா்வாகம் 120 பேரை சோ்த்துள்ளது.

Advertisement

இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட 60 மாணவா்கள் மட்டுமே முதல் பருவத்தோ்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். மீதியுள்ள 60 மாணவா்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்து, கல்லூரி நிா்வாகம் மாணவா்களின் பெற்றோா்களுக்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளது.

இது குறித்து விசாரணை மேற்கொண்டு, கல்லூரி நிா்வாகம் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட 60 மாணவா்களும் தோ்வு எழுதவும், கல்வியை தொடரவும் வழிவகை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.