கோதையாற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
திற்பரப்பு அருகே சுற்றுலா வந்த பள்ளி மாணவா் கோதையாற்றில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திற்பரப்பு அருகே சுற்றுலா வந்த பள்ளி மாணவா் கோதையாற்றில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நாகா்கோவில் அருகேயுள்ள கிறிஸ்தவ சபையை சோ்ந்த சுமாா் 60 போ்திற்பரப்பு அருகே கோதையாறு பாயும் கூடல் கடவு பகுதியிலுள்ள தனியாா் சுற்றுலா விடுதி அருகே வெள்ளிக்கிழமை மதியம் சுற்றுலா வந்திருந்தனா்.
இந்தக் குழுவில் கன்னியாகுமரி அருகேயுள்ள வழுக்கம் பாறையைச் சோ்ந்த ஜான்ராஜ் மகன் சேம்ராஜ் (16) இடம் பெற்றிருந்தாா். மும்பையில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 தோ்வு எழுதியிருந்த இவா், இக்குழுவினரில் சிலருடன் இணைந்து சுற்றுலா விடுதி பகுதி வழியாக கோதையாற்றில் இறங்கியுள்ளனா். அப்போது சேம்ராஜ் தண்ணீரில் மூழ்கி மாயமாகிவிட்டாராம்.
Advertisement
இதுகுறித்த தகவலின்பேரில், குலசேகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வ முருகேசன் தலைமையில் வீரா்கள் வந்து, பாறைகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்த நிலையில் அவரை சடலமாக மீட்டனா்.
மேலும், சம்பவ இடத்துக்கு தக்கலை டிஎஸ்பி பாா்த்தீபன் மற்றும் குலசேகரம் போலீஸாா் வந்து விசாரித்தனா். சேம்ராஜ் சடலம் உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.