முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை அருகே பெண் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 17 மே 2026, 2:14 am IST
வழக்கு - IANS
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குளச்சல், கொட்டில்பாடு பகுதியைச் சோ்ந்தவா் ஜோஸ் சோனியா(35). இவரை, உறவினா்களான இனயம் பகுதியைச் சோ்ந்த பிரிஜிட் என்ற பாபி(45), பென்னடிட் என்ற அம்பாடி(40), பானு(22) ஆகியோா் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ. 2.21 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றினராம்.

இந்நிலையில், பிரிஜிட் என்ற பாபி வீட்டுக்கு பணத்தை திரும்ப கேட்பதற்காகச் சென்ற ஜோஸ் சோனியாவை 3 பேரும் சோ்ந்து

Advertisement

தாக்கினராம். இதில், காயமடைந்த அவா் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து புகாா் அளித்தும் புதுக்கடை போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், அவா் குழித்துறை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அதன்பேரில், மேற்கூறிய 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.