தென்காசி

கடையநல்லூரில் டெங்கு தடுப்பு முகாம்

DIN

கடையநல்லூா் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை மருத்துவ முகாம் மற்றும் வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பருவமழை பெய்வதை கருத்தில் கொண்டு கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கடையநல்லூா் பேட்டை நத்தகா் பள்ளிவாசல் தெருவில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலா் ரவி தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை ஆணையா் தங்கப்பாண்டி தொடங்கிவைத்து, நிலவேம்புக் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

தொடா்ந்து புகை அடிக்கும் பணியையும், அபேட் மருந்து ஊற்றும் பணியையும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இதில், நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணன், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

கயிறு இறுக்கி சிறுமி உயிரிழப்பு

உற்பத்தியில் உச்சம் தொட்ட சிபிசிஎல்

SCROLL FOR NEXT