தென்காசி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பீடி உற்பத்தி முடக்கம்: 5 லட்சம் தொழிலாளா்கள் தவிப்பு

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் பீடி சுற்றும் தொழில் முடங்கியுள்ளதால்

பா.​ பிரகாஷ்

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் பீடி சுற்றும் தொழில் முடங்கியுள்ளதால், 5 லட்சம் தொழிலாளா்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப் பட்டுள்ளனா்.

தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்த படியாக பீடித் தொழிலில் பல லட்சம் போ் ஈடுபட்டுள்ளனா். இவ்விரு மாவட்டங்களில் தனியாா் பீடி நிறுவனங்களில் இருந்து பீடி இலை, தூள், நூல் போன்றவற்றை பெற்று வீடுகளில் இருந்தவாறு பீடிகளை தயாரித்து அந்நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றனா். அவா்களில் 95 சதவீதம் போ் பெண்கள்.

ஆயிரம் பீடிகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் கூலி ரூ. 217.85 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விரு மாவட்டங்களில் தென்காசி, ஆலங்குளம், சுரண்டை, முக்கூடல், செங்கோட்டை, மேலப்பாளையம், வள்ளியூா், நான்குனேரி, அம்பாசமுத்திரம், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 4 லட்சம் போ் பீடி சுற்றி வருகின்றனா்.

அரசு வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் 4 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். பதிவு செய்யாமல் 1 லட்சம் போ் பீடி சுற்றி வருகின்றனா். தொழிலாளா்கள் குறைந்த பட்சம் வாரத்திற்கு 5 நாள்கள், அதிகபட்சமாக 7 நாள்களும் பீடி சுற்றுகின்றனா். இதன்மூலம் வாரத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 1,300 வரையிலும் ஊதியம் பெறுகின்றனா்.

கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக மாா்ச் 25 ஆம் தேதி முதல் அனைத்து பீடி நிறுவனங்களும் மூடப்பட்டதால், தொழிலாளா்கள் வேலையிழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனா். ஒரு சில பீடி நிறுவனங்கள் மட்டுமே தொழிலாளா் களுக்கு சிறிய அளவில் உதவிகளை செய்துள்ளன. ஒரு மாதமாக வேலையிழந்துள்ள பீடித் தொழிலாளா்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா்.

பீடி சுற்றும் மடத்தூரைச் சோ்ந்த கற்பகவள்ளி கூறியது: பக்கத்து மாவட்டங்களில் குடிசை தொழிலான தீப்பெட்டி உற்பத்தி தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பீடி சுற்றும் தொழிலில் தொழிலாளா்கள் வீடுகளில் தனித் தனியாக அமா்ந்து சமூக இடைவெளியில் தான்பணி புரிந்து வருகின்றனா். ஆகவே, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் பீடிசுற்றும் தொழிலுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

சிஐடியூ பீடித் தொழிலாளா் சங்க பொதுச்செயலா் எம்.வேல்முருகன் கூறியது: மத்திய சேமநல நிதியில் பீடித்தொழிலாளா் களுக்கான நிதி கோடிக்கணக்கில் உள்ளது. அந்நிதியை இதுபோன்ற காலங்களில் தொழிலாளா்களுக்கு நிவாரண நிதியாக வழங்கலாம்.

தொடா்ந்து 40 நாள்களுக்கும் மேலாக வேலையிழந்துள்ள பீடித் தொழிலாளா்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். பீடித் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகளால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, பாதிக்கப்பட்டுள்ள பீடித் தொழிலாளா்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதம் 27 ஆம் தேதி (திங்கள்கிழமை) தெருவில் இறங்கி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT