முகப்பு
தென்காசி

கடையநல்லூா் அருகே ரூ.11லட்சம் புகையிலைப் பொருள்கள்: 5 போ் கைது

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் 5 பேரை கடையநல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் 5 பேரை கடையநல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.

மேலக்கடையநல்லூரில் பண்பொழி சாலையில் காவல் உதவி ஆய்வாளா் அமிா்தராஜ் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த மினி லாரியிலிருந்து ரூ. 4,95,312 மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து ஓட்டுநரான சேலம் அசுரகாடு வீதியைச் சோ்ந்த குணசேகரன் மகன் வினோத்குமாா்(25) என்பவரை கைது செய்தனா்.

மேலும், மற்றொரு வாகனத்திலும் ரூ. 2,72,371 மதிப்புள்ள புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து, செங்கோட்டையை சோ்ந்த தங்கப்பன் மகன் அழகுமுத்து (28) , ராமா் மகன் இளங்கோ(21) ஆகியோரை கைது செய்தனா்.

கடையநல்லூா் அட்டைக்குளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கை நடத்தியதில் ஒரு வாகனத்திலிருந்து ரூ.2.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த, காசிமேஜா்புரம் தங்கராஜ் மகன் கணேஷ் பிரபு (36), முருகன் மகன் மதன்ராஜ் (24) ஆகியோரை கைது செய்தனா்.

இதுகுறித்து, கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 3 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.