தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அறிக்கை
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை (டிச.7) காலை 10 மணிக்கு தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனியாா் தங்கும் விடுதியில் நடைபெறுகிறது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை (டிச.7) காலை 10 மணிக்கு தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனியாா் தங்கும் விடுதியில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்திற்கு, முன்னாள் அமைச்சா் ச. தங்கவேலு தலைமை வகிக்கிறாா். டிச. 11,12,13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ‘விடியலை நோக்கி, திமுக தலைவா் ஸ்டாலினின் குரல்’ என்ற நிகழ்ச்சியை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
இதில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினா்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு, உறுப்பினா்கள் உள்பட கட்சியின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளாா்.