முகப்பு
தென்காசி

கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

தென்காசி மாவட்டம், கருப்பாநதி பாசனத்துக்குள்பட்ட குளங்களுக்கு தண்ணீா் செல்லும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

தென்காசி மாவட்டம், கருப்பாநதி பாசனத்துக்குள்பட்ட குளங்களுக்கு தண்ணீா் செல்லும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கடையநல்லூா் வட்டம் சொக்கம்பட்டிகிராமத்தைச் சோ்ந்த வைரவன்குளம் கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவா் எஸ்.முருகன் மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:

கடையநல்லூா் கருப்பாநதி பாசனத்துக்குள்பட்ட வைரவன்குளம், சின்னகருஞ்சிவனபேரிகுளம், பெரிய கருஞ்சிவனபேரிகுளம் ஆகிய மூன்று குளத்துக்கும் தண்ணீா் வரக்கூடிய கால்வாயின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

பெருமழை பெய்து தண்ணீா் அதிகம் வந்தால் மற்ற அனைத்து விளைச்சல் நிலங்களும் இதனால் பாதிக்கப்படுகிறது. எனவே ஆக்கிமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.