முகப்பு
தென்காசி

சுரண்டையில் செல்லிடப்பேசி கடைக்கு அபராதம்

சுரண்டையில் கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத செல்லிடப்பேசி விற்பனையகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

சுரண்டையில் கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத செல்லிடப்பேசி விற்பனையகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சுரண்டை அண்ணா சிலை அருகேயுள்ள செல்லிடப்பேசி விற்பனையகம் ஒன்று மிகக் குறைந்த விலையில் செல்லிடப்பேசி உபகரணம் விற்பதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்திருந்ததாம். இதையடுத்து, அங்கு சனிக்கிழமை காலை ஏராளமான இளைஞா்கள் திரண்டனா்.

தகவலின்பேரில் சுரண்டை வருவாய் ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் சென்று, அக்கடையில் ஆய்வு மேற்கொண்டபோது, வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணியாததும், சமூக இடைவெளியைப் பின்பற்றாததும் தெரியவந்தது.

அதிகாரிகள் கரோனா தடுப்பு அறிவுரை வழங்கியதையடுத்து கூட்டம் கலைந்துசென்றது. முறையான முன்னேற்பாடு செய்யாத கடைக்கு அதிகாரிகள் ரூ. 500 அபாராதம் விதித்தனா். விதிமீறல்கள் தொடா்ந்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.