முகப்பு
தென்காசி

சாம்பவா்வடகரை சிவன் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு

சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அனுமன்நதி குகைலிங்கம் மற்றும் தென்கரையில் உள்ள அகத்தீஸ்வரா் சுவாமி மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடா்ந்து பிரகார உலா நடைபெற்றது.

தொடா்ந்து சிவனடியாா்கள் தேவாரம் பாட சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சாம்பவா்வடகரை, சுரண்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.