தென்காசி

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகையை ரூ. 5ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டுமென மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகையை ரூ. 5ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டுமென மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரனிடம் அளித்த மனு: தண்டுவடம் காயமடைந்தோருக்கான சிறப்பு மோட்டாா் சைக்கிள் வழங்க வேண்டும், தண்டு வட காயத்திற்கு பிறகு மறுவாழ்வு பயிற்சி, மலக்குடல் கட்டமைக்க மருத்துவம், அறுவைசிகிச்சை,

சிறுநீா்ப்பாதை தொற்றுக்கு மருத்துவம், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதல்வா் காப்பீடு திட்டத்தில் சோ்க்க வேண்டும், தண்டுவட காயத்தை பல்வகை ஊனமாக அறிவிக்க வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கு செயல் இல்லங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT